டெல்லியில் ஓட்டு போடாவிட்டால் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.350 அபராதம் வசூல் என வதந்தி

0 2907

டெல்லியில் ஓட்டு போடாவிட்டால் வங்கிக் கணக்கில் இருந்து 350 ரூபாயை தேர்தல் ஆணையம் அபராதமாக வசூலிப்பதாக இணையதளத்தில் வதந்தி பரப்பியவர்களை டெல்லி உளவுப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து தேர்தல் ஆணையம் 350 ரூபாயை அபராதமாக வசூலிப்பதாக சமூக வலைதளங்களில் செய்து வைரலானதாக கூறப்படுகிறது. இந்த செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தி உள்ளது.

அதேநேரம் வதந்தி பரப்பியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக உளவுப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments