சேற்றில் உருண்டு புரண்டு கபடி ஆடிய இளைஞர்கள்... பாரம்பரிய விளையாட்டுகளால் கிராம மக்கள் உற்சாகம்
கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே உள்ள யேக்கூர் என்ற கிராமத்தில் பாரம்பரிய சேற்று விளையாட்டு நிகழ்ச்சிகள் அரங்கேறின.
கபடி உள்ளிட்ட விளையாட்டுகளில் ஆண்களும் பெண்களும் உற்சாகமாகப் பங்கேற்று வாரியிறைக்கப்பட்ட சேற்றுக்குள் உருண்டு புரண்டு விளையாடி மகிழ்ந்தனர்
விவசாயத்தை மேம்படுத்தவும் விளையாட்டுத் துறையை ஊக்கப்படுத்தவும் கர்நாடக கிராமங்களில் இது போன்ற பாரம்பரிய விழாக்கள் நடைபெறுகின்றன.
Comments