நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுமா? இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம்!
ஒமிக்ரான் வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டுமா என்பது குறித்து முடிவெடுக்க இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் இக்கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள் அறிவியல் நிபுணர்கள் பங்கேற்க உள்ளனர். வயது முதிர்ந்தவர்கள், பலவகை நோயால் அவதிப்படுகிறவர்கள். ஏய்ட்ஸ் நோயாளிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்த வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர்.
அண்மையில் சீரம் நிறுவனம் மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையத்திடம் கோவிஷீல்டை பூஸ்டர் தடுப்பூசியாகப் பயன்படுத்த அனுமதி கோரியுள்ளது. இது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.அதன்படி இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது குறித்த முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments