ஜாவத் புயல் வலுவிழந்த போதும் ஒடிசா, மேற்கு வங்கத்தில் கொட்டித் தீர்த்த கனமழை!
ஜவாத் புயல் வலுவிழந்த நிலையில் ஒடிசா கடல்பகுதியில் மையம் கொண்டதனால் நேற்று ஒடிசா மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பலத்த மழை கொட்டியது.
கரையைக் கடக்காமல் நகர்ந்து சென்ற காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக பாரதீப் என்ற சிறிய துறைமுக நகரில் 100 மில்லிமீட்டருக்கு மேல் பெய்யும் மழையை ஏற்படுத்தக் கூடிய மேக வெடிப்பு ஏற்பட்டு பலத்த மழை கொட்டியது. இதனால் அங்கிருந்த குடிசை வீடுகள் நீரில் மூழ்கின.
முழு டவுணும் மூழ்கிவிடும் அளவு நீரால் சூழ்ந்தது. 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை கணித்த நிலையில் புயல் வலுவிழந்ததால் காற்றின் வேகம் பாதியாகக் குறைந்தது. நேற்று நள்ளிரவில் ஜாவத் புயல் மேலும் வலுவிழந்து வடக்கு நோக்கி நகர்ந்ததாக வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Comments