பாபர் மசூதி இடிப்பு தினம் -முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு!
பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தை இஸ்லாமிய அமைப்புகள் கருப்பு தினமாக அனுசரித்து வருவதையொட்டி இன்று டெல்லி, மும்பை, அயோத்தி, மதுரா உள்ளிட்ட நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் கண்ணன் பிறந்த ஜன்மபூமியான மதுராவில் கண்ணன் பிறந்த இடத்தில் மசூதி ஒன்று இருப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தியதால் பதற்றம் உருவானது.
இந்நிலையில் மதுராவில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க இன்று போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நகருக்குள் வரும் வாகனங்கள் தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர்.
Comments