நடிகை ஜாக்குலினை வெளிநாடு செல்ல விடாமல் தடுத்த அமலாக்கத்துறையினர்

0 5312

பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் மஸ்கட் செல்வதற்காக மும்பை விமான நிலையம் வந்த போது அவரை விமானத்தில் செல்ல விடாமல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

சட்டவிரோதமாக 200 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை செய்தது தொடர்பான வழக்கில் டெல்லியில் விசாரணைக்கு ஆஜராகும் படி அவருக்கு சம்மன் வழங்கப்பட்டது. சுகேஷ் சந்திரசேகர் என்ற தொழிலதிபரின் மீதான மோசடி வழக்கில் அவரிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் விசாரணைக்கு முன்பு இந்தியாவை விட்டு செல்லக்கூடாது என்று அவருக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.சந்திரசேகர் மீது அமலாக்கத்துறை தாக்கல் செய்த 7 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் மற்றும் நோரா பத்தேயி ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments