இறந்த நபருக்கு கொரோனா தடுப்பூசியா...? - அதிர்ச்சியில் குடும்பத்தினர்

0 7739

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே 2 மாதங்களுக்கு முன் உயிரிழந்தவருக்கு, தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதாக குறுஞ்செய்தி வந்ததுள்ளதாக, அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

மாரியப்பன் என்ற அந்த நபர் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறார். அதற்கு பிறகு சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த,மாரியப்பன், அக்டோபர் மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாரியப்பனின் மகன் மாரி செல்வம் தந்தையின் இறப்பை பதிவு செய்து, நகராட்சியிடம் இருந்து இறப்பு சான்றிதழும் பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று திடீரென மாரியப்பனின் செல்போன் எண்ணுக்கு அவர் 2ஆவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக எஸ்எம்எஸ் வந்ததாக, அவரது மகன் கூறியுள்ளார். இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, பதிலளிக்கவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments