தெலுங்கானாவில் ஒரே நேரத்தில் 43 மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று

0 3988

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவகல்லூரியில் பயின்ற 43 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரீம் நகர் மாவட்டத்தில் இயங்கிவரும் தனியார் மருத்துவ கல்லூரியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர். இந்நிலையில், சிலருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து பரிசோதனை மேற்கொண்டதில் 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, கல்லூரிக்கு விடுமுறை விடபட்டுள்ளதோடு, அங்கு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments