சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நண்பனை காண வந்து மருத்துவமனையில் குத்தாட்டம் போட்ட நண்பர்கள்
கன்னியாகுமரியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நண்பர் ஒருவரை சக நண்பரோடு பார்க்க சென்ற இளைஞர் குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
யூடியூபில் எதையாவது செய்து பிரபலமடைய வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் வலம் வரும் பலரில் ஒருவரான குழித்துறை பகுதியை சேர்ந்த சர்ஜின், "மதுர குலுங்க குலுங்க" என்ற பாட்டுக்கு தன் நண்பருடன் நடனமாடும் வீடியோவை பதிவேற்றிய நிலையில், அது வைரலாகி வருகிறது..
அண்மையில் பெண் வேடமணிந்து மார்த்தாண்டம் பகுதியில் பேருந்தில் பயணம் செய்து நடத்துனரை வம்பிழுத்து வீடியோ வெளியிட்டதும் இதே சர்ஜின் தான். பெட்ரோல் பங்கிற்கு பனைநுங்கு வண்டியை ஓட்டிச்சென்று பெட்ரோல் போடுமாறு கூறி, வீடியோ வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
Comments