தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

0 4099

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

திங்கட்கிழமை அன்று சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க திட்டமிட்டிருந்த ஆளுநர், அந்த பயணத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி சென்றார்.

சனிக்கிழமையன்று நாகாலாந்து மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுடன் அவசர ஆலோசனை மேற்கொள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments