சபரிமலை கோவிலில் தரிசனம் செய்ய அதிகளவில் குவியும் பக்தர்கள்..!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய அதிகளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
மண்டல பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், இணையதள வாயிலாக பதிவு செய்து பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று 27 ஆயிரத்து 840 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாகவும், சனிக்கிழமை அன்று தரிசனம் செய்ய 42 ஆயிரத்து 354 பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்ததாகவும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.
மேலும், வரும் நாட்களில் ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய அதிக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
Comments