விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் பாம்பு கடித்து இறந்ததாக தெரிவித்த போலீசார் - உறவினர் சாலை மறியல்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், போலீசார் தாக்கியதால்தான் இறந்ததாகக் கூறி உறவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சனிக்கிழமை இரவு கீழத்தூவல் காவல் நிலையம் அருகே போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த கல்லூரி மாணவர் மணிகண்டனை நிறுத்த முற்பட்டபோது, அவர் நிற்காமல் சென்றார் என்று கூறப்படுகிறது.
மணிகண்டனை விரட்டிப் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார், விசாரணைக்குப் பின் நள்ளிரவில் உறவினர்களிடம் அவரை ஒப்படைத்துள்ளனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
போலீசார் தாக்கியதால்தான் மணிகண்டன் உயிரிழந்ததாக உறவினர் குற்றம்சாட்டும் நிலையில், அவர் பாம்பு கடித்து இறந்ததாக போலீசார் கூறுகின்றனர்.
Comments