வெளிநாட்டு சொகுசுக் கப்பலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 43 பேரிடம் ரூ.48 லட்சம் பெற்று மோசடி செய்ததாக பெண் உட்பட இருவர் கைது
வெளிநாட்டு சொகுசுக் கப்பலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னையில் ஒரு பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளிக்கரணையைச் சேர்ந்த வினோத் என்பவர், வெளிநாட்டு சொகுசுக் கப்பலில் வேலை என்ற விளம்பரத்தை ஃபேஸ்புக்கில் பார்த்து, நுங்கம்பாக்கத்திலுள்ள "குட்லைஃப் சொலுஷன் பிரைவேட் லிமிடெட் " என்ற நிறுவனத்தை அணுகியுள்ளார்.
நிறுவனத்தின் மேலாண் இயக்குனரான ராஜாவும் அவரது உதவியாளரான திவ்யபாரதி என்ற பெண்ணும், வினோத்திடம் ஒரு லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டனர் என்று கூறப்படுகிறது.
ஆனால் சொன்னபடி வேலை வாங்கித் தராமல் அலைக்கழித்ததால், போலீசில் வினோத் புகாரளித்தார். இருவரையும் பிடித்து விசாரித்தபோது, இதே பாணியில் 43 பேரிடம், 48 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரை பெற்று மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
Comments