நடிகர் விஜய்சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகர் மகா காந்தி மனு

0 8667

நடிகர் விஜய்சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கூறி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் மகாகாந்தி என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தாம் பெங்களூரு சென்ற போது, அங்கு விமான நிலையத்தில் எதிர்பாராத விதமாக நடிகர் விஜய்சேதுபதியை சந்தித்தாகவும், அப்போது, அவரது சாதனைகளை பாராட்டி வாழ்த்தியதாகவும் கூறியுள்ளார். ஆனால், தனது வாழ்த்துக்களை விஜய் சேதுபதி ஏற்க மறுத்ததாகவும், பொதுவெளியில் தன்னையும், தாம் சார்ந்த சமூகத்தையும் இழிவாக பேசியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த பின்னர், விஜய் சேதுபதியின் மேலாளர் ஜான்சன் தன்னை தாக்கியதாகவும், அதில் தனது செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இந்த சம்பவத்தை திரித்து, தாம் தாக்கப்பட்டது போல் நடிகர் விஜய்சேதுபதி சித்தரித்துவிட்டதாகவும், அவர் மீதும், அவரது மேலாளர் ஜான்சன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments