மூச்சுத்திணறலால் சிறுமி உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரம் ; தாய் மற்றும் பாட்டியால் ஆணவக் கொலை செய்யப்பட்டது விசாரணையில் அம்பலம்

0 2986
தாய் மற்றும் பாட்டியால் ஆணவக் கொலை செய்யப்பட்டது விசாரணையில் அம்பலம்

தெலுங்கானாவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்பட்ட 17 வயது சிறுமி, பெற்ற தாய் மற்றும் பாட்டியாலாயே ஆணவக் கொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த சிறுமி, கடந்த 19ஆம் தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டார் எனக் கூறி அடக்கம் செய்துள்ளனர். அதில் சந்தேகமடைந்த உறவினர் போலீசில் புகாரளித்தனர்.

விசாரணையில் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞனை அந்தச் சிறுமி காதலித்து வந்ததும் தாயும் பாட்டியும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததும் தெரியவந்தது. சிறுமி தனது காதலை கைவிட மறுத்ததால், சம்பவத்தன்று அவரது முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி தாயும் பாட்டியுமே கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments