வங்கக்கடலில் உருவான ஜாவத் புயல் தற்போது ஒடிசா அருகே நிலை கொண்டுள்ளது ; இந்திய வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் உருவான 'ஜாவத்' புயல் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில், அது தற்போது ஒடிசா அருகே நிலை கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒடிசா கடலோரப் பகுதியை நெருங்கும் என்றும் அம்மையம் குறிப்பிட்டுள்ளது. இதனை அடுத்து, அம்மாநிலத்தின் புரி, கட்டாக் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், புரி பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுகிறது.
மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வங்கத்தையும் நெருங்கக்கூடும் என்பதால் அம்மாநிலத்திலும் திகா உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலும் கடல் சீற்றமாக காணப்படுகிறது.
Comments