இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், இருநாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இந்தோனேசியாவின் சுலேவெசி மாகாணத்தில் உள்ள டொபேலோ நகருக்கு அருகே, அதிகாலையில் சுமார் 174 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகி இருந்தது. இத்தகவலை, இந்தோனேசியாவின் நிலநடுக்கம் மற்றும் சுனாமி கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
எனினும், இதில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து, இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதே நேரத்தில், அருகேயுள்ள பிலிப்பைன்ஸ் நாட்டிலும் சரங்கணி தீவுக்கு அருகே 156 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அந்நாட்டு நிலநடுக்க கண்காணிப்புத்துறை தெரிவித்துள்ளது. இது 6.1 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது. இதன் தாக்கம் அருகேயுளள கேட்டில் நகரில் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments