ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால் விபரீதம் ; தடுப்பு சுவரின் மீது மோதியதால் தீப்பிடித்து லாரி எரிந்து சேதம்

0 2591
ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால் விபரீதம் ; தடுப்பு சுவரின் மீது மோதியதால் தீப்பிடித்து லாரி எரிந்து சேதம்

ஓசூர் அருகே அதிகாலையில் கிரானைட் கற்களை ஏற்றி வந்த லாரி, ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால் தடுப்புச் சுவரின் மீது மோதியதில், டீசல் டேங்கில் கசிவு ஏற்பட்டு லாரி முழுவதும் தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது.

தெலங்கானா மாநிலம் தாண்டூரிலிருந்து கேரளாவுக்கு சுமார் 40 லட்சம் மதிப்புள்ள கிரானைட் கற்களை ஏற்றிவந்த லாரி, திண்ணைப்பள்ளி என்னுமிடத்தில் சென்று கொண்டிருந்த போது
ஓட்டுநரின் தூக்க கலக்கத்தால் சாலையில் இருந்த தடுப்பு சுவரின் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதில், லாரியின் டீசல் டேங்கல் கசிவு ஏற்பட்டு லாரி திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் கோவிந்தன் லாரியில் இருந்து கீழே இறங்கி உயிர் தப்பிய நிலையில், தகவல் அறிந்து வந்த ஓசூர் தீயணைப்பு துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் லாரி முழுவதுமாக எரிந்து நாசமானது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments