இதர கோரிக்கைகள் நிறைவேறும் வரை டெல்லி எல்லையில் நடக்கும் போராட்டத்தை வாபஸ் பெற முடியாது ; விவசாய சங்கங்கள்

0 2519
போராட்டத்தைத் தொடர்வதாக விவசாய சங்கங்கள் அறிவிப்பு

3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்ற நிலையிலும் இதர கோரிக்கைகள் நிறைவேறும் வரை டெல்லி எல்லையில் நடக்கும் போராட்டத்தை வாபஸ் பெற முடியாது என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைத்துள்ளதாகவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் இருந்தே டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டுள்ள அவர்கள், ஓராண்டுக்கும் மேலாக அங்கு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்பட நிலுவையில் உள்ள பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வரை போராட்டத்தை வாபஸ் பெறமாட்டோம் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும், போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments