வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தை டிசம்பர் 13 ஆம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
வாரணாசியில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தை பிரதமர் மோடி வரும் 13 ஆம் தேதி திறந்து வைக்கிறார். இதற்கான இறுதிக் கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் புதிய வளாகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இப்போது இதன் பெயர் காசி விஸ்வநாத் தாம் என்று மாற்றப்பட்டுள்ளது. 339 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட ஆலய வளாகம் என்ற தமது கனவுத்திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
50 ஆயிரம் சதுர அடியில் 24 கட்டடங்களுடன் இந்தப் புதிய வளாகம் அமைந்துள்ளது. இதன் பிரம்மாண்டமான நான்கு வாயில் கதவுகள் அமைக்கும் பணியும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
Comments