100 சதவீதம் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ள முதல் மாநிலமாக மாறியுள்ளதாக இமாச்சலப் பிரதேச அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0 2645
இமாச்சலில் தகுதியுள்ள அனைவருக்கும் 100% தடுப்பூசி போடப்பட்டது

இந்தியாவிலேயே தகுதியுள்ள அனைத்து மக்களுக்கும் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ள முதல் மாநிலமாக மாறியுள்ளதாக இமாச்சலப் பிரதேசம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அம்மாநில அரசு விடுத்துள்ள அறிக்கையில், 53 லட்சத்து 86 ஆயிரம் தகுதியான நபர்களுக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி பிலாஸ்பூரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்கு இன்று பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.

இதில் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் மான்சுக் மாண்டவியா, அனுராக் தாக்கூர் உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளதாக இமாச்சலப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments