யானைகள், மனித மோதலைத் தடுக்க சிறிய தேனீக்களைப் பயன்படுத்தி யானைகளை விரட்டும் ‘ரீ-ஹேப்’ என்ற புதிய திட்டம் அறிமுகம்
அசாமில் யானைகள் - மனித மோதலைத் தடுக்க சிறிய தேனீக்களைப் பயன்படுத்தி யானைகளை விரட்டும் ‘ரீ-ஹேப்’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி யானைகள் செல்லும் வழித்தடத்தில், அவை மனிதர்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில், தேனீ வளர்ப்புப் பெட்டிகளை வைத்து,தேனீ வேலிகள் அமைக்கப்படும்.
இந்தப் பெட்டிகளை இழுத்தால் அதில் உள்ள தேனீக்கள் யானைகளை சுற்றி வளைத்து விரட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாமில் யானைகளின் தாக்குதலால் 2014 முதல் 2019ஆம் ஆண்டு வரை 332 பேர் உயிரிழந்துள்ளனர்.
Comments