இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி 38 ஆயிரம் கோடியை தாண்டியது ; மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
இந்தியா கடந்த 7 ஆண்டுகளில் 38 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இந்திய பாதுகாப்புத் துறை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சிறு, குறு, நடுத்தர தொழில்துறை மாநாட்டில் பேசிய அவர், தற்போது சுமார் 70 நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஆயுத தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்றார்.
விரைவில் முழுமையான ஆயுத இறக்குமதி நாடு என்ற நிலையில் இருந்து, முழுமையான ஆயுத ஏற்றுமதி நாடு என்ற நிலையை நாம் அடைவோம் என்று தெரிவித்தார்.
Comments