அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினும் டிசம்பர் 7 ஆம் தேதி இணைவழியாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினும் டிசம்பர் 7 ஆம் தேதி இணைவழியாக பேச்சுவார்த்தை நிகழ்த்த உள்ளனர்.
உக்ரைன் எல்லையில் ரஷ்யா 90 ஆயிரம் பேர் கொண்ட படைகளைக் குவித்திருப்பதால் பதற்றம் நிலவும் சூழலில் அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்தச் நிலையில் அமெரிக்க ரஷ்ய உறவை மேம்படுத்தவும் சைபர் கிரைம்,உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளை குறித்து ஆலோசிக்கவும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டுள்ளனர்.
வீடியோ லிங்க் மூலமாக இரு தலைவர்களும் உரையாடுவார்கள் என்றும் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து கொள்வார்கள் என்றும் ரஷ்யாவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments