இந்தியாவில் முதன்முறையாக வாகன உரிமம் பெற்ற குள்ள மனிதர்
இந்தியாவில் முதன் முதலாக ஹைதரபாத்தை சேர்ந்த குள்ள மனிதர் கட்டிபல்லி சிவலால் என்பவர் வாகன உரிமம் பெற்றுள்ளார். 42 வயதான அவர் 3 அடி உயரமே உடையவர். 2004 ஆம் ஆண்டு பட்டப்படிப்பு முடித்த மாற்றுத் திறனாளியான அவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
சில திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். யூடியூப்பில் கால்களை இழந்த ஒருவர் கார் ஓட்டுவதைப் பார்த்து தாமும் அமெரிக்காவின் நியுயார்க் சென்று 15 நாட்கள் தங்கி அவரிடம் மாற்றுத் திறனாளிகளுக்கான கார் மெக்கானிசம் கற்றுக் கொண்டதாக கூறும் அவர் இந்தியாவில் சில நண்பர்கள் உதவியால் கார் ஓட்டப்பழகினார்.
ஆனால் வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவது சிக்கலாயிருந்தது என்று தெரிவித்த சிவலால் சென்னையைச் சேர்ந்த ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உரிமம் வழங்கப்பட்ட அரசாணையின் நகலைப் பெற்று உயர் அதிகாரிகளிடம் காட்டி அதே முறையில் வாகன உரிமம் பெற்றதாகத் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளுக்காக ஓட்டுநர் பயிற்சி பள்ளி தொடங்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.
Comments