முன்னாள் காவல் ஆணையர் பரம்வீர்சிங் உள்பட 4 பேர் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்

0 1733
முன்னாள் காவல் ஆணையர் பரம்வீர்சிங் உள்பட 4 பேர் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்

மஹாராஷ்டிராவின் முன்னாள் மும்பை காவல் ஆணையர் பரம்வீர் சிங், பணிநீக்கம் செய்யப்பட்ட போலீஸ் எஸ்.ஐ., சச்சின் வாஸ் உட்பட நால்வர் மீது, மும்பை நீதிமன்றத்தில் போலீசார் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

சுமார் 1895 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் பல சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டுக்கு அருகே வெடிகுண்டுடன் கார் நிறுத்தி வைக்கப்பட்ட விவகாரத்தில் பதவியை இழந்த பரம்வீர் சிங, அமைச்சராக இருந்த தேஷ்முக் லஞ்சம் வாங்க நெருக்குதல் தருவதாக புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.

பல மாதங்களாக தலைமறைவாக இருந்து அண்மையில் மும்பை திரும்பி விசாரணைக்கு ஆஜரனார். காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரானியை கொலை செய்த வழக்கில் எஸ்ஐ சச்சன் வாஸ் என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்டார். இருவரும் பிமல் அகர்வால் என்ற மதுக்கடை உரிமையாளரிடம் பணம் பறித்ததாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments