”பசி அதிகமாக இருந்ததால் பையை பிடிங்கி ஓடினேன்” - கதறி அழுத இளைஞன்..!

0 6367
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், பட்டப்பகலில் முதியவரின் கைப்பையை பிடிங்கி கொண்டு ஓடிய திருடனை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், பட்டப்பகலில் முதியவரின் கைப்பையை பிடிங்கி கொண்டு ஓடிய திருடனை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பழனி ரோட்டில் உள்ள டீக்கடையில், டீக்குடித்து கொண்டிருந்த முதியவர் கையில் வைத்திருந்த மஞ்சள் பையை பறித்துவிட்டு ஓடிய அந்த இளைஞனை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். அப்போது கதறி அழுத இளைஞன், பசிக்காகவே திருடியதாகவும் பையில் பழங்கள் இருந்ததால் அதனை எடுத்துவிட்டு பையை தூக்கிவீசியதாகவும் கூறியுள்ளான்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், நடத்திய விசாரணையில் திருட்டில் ஈடுபட்ட இளைஞன், சேலம் மாவட்டத்தை சேர்ந்த விக்கிரமன் என்பதும், இதற்கு முன் அவர் மீது எந்த வழக்கும் இல்லாததும் தெரியவந்தது. இதனையடுத்து, விக்கிரமனுக்கு உணவு வாங்கி கொடுத்த போலீசார், சேலம் செல்ல பணம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments