இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்டின் முதல் இன்னிங்சில், நியூசிலாந்து அணி 62 ரன்களில் சுருண்டது

0 5441

இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 62 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில், 325 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயங் அகர்வால் 150 ரன்கள் எடுத்த நிலையில், அக்சர் பட்டேல் அரைசதம் அடித்தார். நியூசிலாந்து பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதனையடுத்து முதலாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 62 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனையடுத்து 263 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவு வரை விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments