அதிமுகவுக்கு எதிராக பேசியதாக அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகி மீது தாக்குதல்

0 3178
அதிமுகவுக்கு எதிராக பேசியதாக அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகி மீது தாக்குதல்

அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகி ஒருவரை, அக்கட்சியினரே தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. அப்போது, அக்கட்சியின் கர்நாடக மாநில முன்னாள் செயலாளர் புகழேந்தி அங்கு வரவுள்ளதாக தகவல் பரவியது.

இந்நிலையில், அதிமுகவிற்கு எதிராக பேசியதாக கூறி, பெரம்பூர் அதிமுக மாணவரணி துணை செயலாளர் விஜயகுமார் என்பவரை அதிமுகவினர் தாக்கினர்.

இதையடுத்து, அவரை அங்கிருந்து அழைத்துச் சென்ற அதிமுக நிர்வாகிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் கட்சி தலைமைக்கு எதிராக பேசவில்லை என்பதும், புகழேந்திக்கு ஆதரவாக செயல்படவில்லை என்பதும் தெரியவந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments