மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலையில் சந்தேகம் இல்லை ; சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

0 3141
மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலையில் சந்தேகம் இல்லை

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலத்தின் தற்கொலையில், இதுவரை கிடைத்த விசாரணை தகவல்களின்படி அவரது மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

வேளச்சேரியில் உள்ள அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் மேற்கொண்ட சோதனையில், 13 லட்சம் ரூபாய் பணமும் 11 கிலோ தங்கமும் 15 கிலோ எடையுள்ள சந்தனமர பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரம் காட்டிய நிலையில், வெங்கடாசலம் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக சம்மன் அனுப்பப்படவில்லை என்றும், எப்போது விசாரணைக்கு வரமுடியும் என்று தொலைபேசி மூலம் லஞ்சஒழிப்பு அதிகாரிகள் கேட்டுள்ளனர் என்றும், சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments