விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைப்பு

0 2174
மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைப்பு

விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசுடன் பேச்சு நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் திரும்பப் பெற்ற நிலையிலும், மற்ற கோரிக்கைகளுக்காகத் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கக் கூட்டமைப்பு தெரிவித்தது.

இந்நிலையில் டெல்லி சிங்கு எல்லையில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கூடிப் பேசினர். கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகேஷ் திகாயத், மத்திய அரசுடன் பேச்சு நடத்த 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாகத் தெரிவித்தார். மீண்டும் டிசம்பர் ஏழாம் நாள் கூடிப் பேச உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments