பள்ளி ஆசிரியை கொலை வழக்கு ; குற்றவாளியுடன் உள்துறை அமைச்சருக்குத் தொடர்புள்ளதாக குற்றஞ்சாட்டி சட்டமன்றத்துக்குள் சடங்குகளை நடத்திய காங்கிரஸ் உறுப்பினர்கள்
ஒடிசாவில் பள்ளி ஆசிரியை கொலை வழக்கில் குற்றவாளியுடன் உள்துறை அமைச்சருக்குத் தொடர்புள்ளதாகக் குற்றஞ்சாட்டிக் காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டமன்றத்துக்குள் சடங்குகளை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காலகண்டி மாவட்டத்தில் தனியார் பள்ளி ஆசிரியையான மமிதா மெகரைக் கழுத்தை நெரித்துக் கொன்று உடலைத் துண்டு துண்டாக வெட்டிப் பெட்ரோல் ஊற்றி எரித்து எலும்புகளைப் பள்ளி மைதானத்தில் குழிதோண்டிப் புதைத்தது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆசிரியையைக் காணவில்லை என அளித்த புகார் மீதான விசாரணையில் பள்ளி நிர்வாகக் குழுத் தலைவர் கோவிந்த் சாகு இந்தக் கொலையைச் செய்திருப்பது தெரியவந்தது. கோவிந்த் சாகுவின் கள்ளத் தொடர்புகளை அறிந்த ஆசிரியை மமிதா மெகர் அதை அம்பலப்படுத்தி விடுவதாக மிரட்டியதால் இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
கோவிந்த் சாகுடன் உள்துறை அமைச்சர் திவ்ய சங்கர் மிஸ்ராவுக்குத் தொடர்புள்ளதாக பாஜக, காங்கிரஸ் கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. இந்நிலையில் அவரைப் பதவியில் இருந்து நீக்கக் கோரிச் சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பூசாரி வேடம்போட்டுச் சடங்குகளைச் செய்தனர்.
Comments