குஜராத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி ; குஜராத் சுகாதாரத் துறை

0 2743
குஜராத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி

குஜராத்தில் முதலாவது ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஜிம்பாப்வேயில் இருந்து திரும்பி வந்த ஜாம் நகரை சேர்ந்த 72 வயதான ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கலாமோ என்ற சந்தேகத்தில் அவரது மாதிரி மரபுக்கூறு வரிசைப்படுத்துதல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதில் ஒமிக்ரான் தொற்று உறுதியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் முதன்முறையாக கர்நாடகவில் இரண்டு பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 66 வயது நபர் கடந்த 20 ஆம் தேதி பெங்களுரூ வந்தார்.

மற்றோர் நபரான 46 வயது மருத்துவர் தென்னாப்பிரிக்காவுக்கு செல்லாதவர் என்றாலும் கடந்த 22 ஆம் தேதி அவருக்கு ஒமிக்ரான் உறுதியாகி பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments