அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயன்படுத்தப்படாத கழிவறையில் இருந்து பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் மீட்பு

0 4000
பயன்படுத்தப்படாத கழிவறையில் இருந்து பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் மீட்பு

தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயன்படுத்தப்படாத கழிவறை ஒன்றில் இருந்து, பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பெண்களுக்கான கழிவறைப் பகுதியில் பயன்படுத்தப்படாத மேற்கத்திய வகை கழிவறை ஒன்று உள்ளது. அதிலுள்ள தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிக்குள், பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் கிடந்துள்ளது.

தகவலறிந்து வந்த போலீசார் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மருத்துவமனை பதிவேட்டில் இல்லாத மர்ம பெண் ஒருவர், அந்தக் கழிவறைக்குள் செல்வதும் 5 நிமிடம் கழித்து வெளியேறுவதும் பதிவாகி இருந்தது.

அந்தப் பெண் தான் குழந்தையை தொட்டிக்குள் போட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments