உத்தர பிரதேசத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான ஏகே 203 துப்பாக்கிகளை தயாரிக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்
உத்தர பிரதேச மாநிலம் கோர்வாவில் 5 லட்சத்திற்கும் அதிகமான ஏகே 203 துப்பாக்கிகளை தயாரிக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. ராணுவ தளவாட உற்பத்தியில் சுயசார்பை எட்டும் முயற்சியின் ஒரு கட்டமாக இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்தோ-ரஷ்யன் ரைபிள்ஸ் பிரைவேட் லிமிட்டட் என்ற இரு நாட்டு கூட்டு நிறுவனம் வாயிலாக இந்த துப்பாக்கிகள் தயாரிக்கப்படும். இதற்கான துணை மற்றும் அடிப்படை பாகங்களை எம்எஸ்எம்இ நிறுவனங்கள் தயாரித்து வழங்கும். உத்தர பிரதேசத்தை முன்னோடி ராணுவ தளவாட உற்பத்தி மாநிலமாக மாற்றும் திட்டத்தின் ஒரு அங்கமாகவும் இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
போர்த்துப்பாக்கிகளில் நவீனமானவை என கருதப்படும் ஏகே 203 துப்பாக்கிகள் தயாரான பின்னர், அவை ராணுவத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் INSAS துப்பாக்கிகளுக்குப் பதிலாக சேர்க்கப்படும்.
Comments