சீன பாரம்பரிய மருந்துகளின் பலனளிக்கும் திறனை அதிகரிப்பது தொடர்பான ஆராய்ச்சியில் சீன மருத்துவ நிபுணர்கள் தீவிரம்
சீன பாரம்பரிய மருந்துகளின் பலனளிக்கும் திறனை அதிகரிப்பது தொடர்பான ஆராய்ச்சியில் அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்னர்.
வயிறு மற்றும் மண்ணீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு, மேற்கத்திய மருத்துவ முறை போதிய பலன் அளிப்பது இல்லை என சீனர்கள் கருதுகின்றனர். இதையடுத்து, பாரம்பரிய மருத்துவ முறை மீது அந்நாட்டு அரசு கவனத்தை திருப்பியுள்ளது.
அந்தவகையில், வயிற்று வலிக்கு 5 மூலிகைகளை கொண்ட முக்கோண வடிவ மாத்திரைகள் அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன. மேலும், விண்வெளி வீரர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்யும் வகையில் பிரத்யேக மருந்து தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருவதாக சீன மருத்துவ ஆராய்ச்சி துறையின் பொது மேலாளர் லீ வென்ஞன் தெரிவித்துள்ளார்.
Comments