திருமண செய்யாமல் காதலன் ஏமாற்றிவிட்டதாக 'பிக் பாஸ்' ஜூலி புகார்

0 7714

திருமணம் செய்வதாக கூறி  காதலித்து மனிஷ் என்ற நபர் தன்னை ஏமாற்றிவிட்டதாக பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துக் கொண்ட ஜூலி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

பிரபல சலூன் நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் அமிஞ்சிகரையை சேர்ந்த மனிஷ் என்பவரை 4 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், அவருக்காக பைக், தங்கச் செயின், பிரிட்ஜ் என சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக ஜூலி தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மதத்தை காரணம் காட்டி தனது பெற்றோர்கள் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என்று கடந்த செப்டம்பர் மாதம் மனிஷ் தெரிவித்ததாகவும், அதனை தொடர்ந்து  மன ரீதியாகவும் , ஏதாவது பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தனக்கு மனிஷ் தொடர்ந்து  தொல்லை கொடுத்து  வருவதாகவும் சென்னை அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் மனிஷை அழைத்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments