கூகுள்பே, போன்பே ஆகிய நிறுவனங்களால் வங்கிகள் தங்கள் பெருமளவு வணிகத்தை இழக்க வேண்டியிருக்கும் ; உதய் கோட்டக் எச்சரிக்கை
இணைய வழிப் பணம் செலுத்தும் வணிகம் செய்யும் கூகுள்பே, போன்பே ஆகிய நிறுவனங்களால், வங்கிகள் தங்கள் பெருமளவு வணிகத்தை இழக்க வேண்டியிருக்கும் எனக் கோட்டக் மகிந்திரா வங்கித் தலைவர் உதய் கோட்டக் எச்சரித்துள்ளார்.
பணம் செலுத்தும் வணிகம் குறித்த வங்கிகளின் குறுகிய பார்வையால், யுபிஐ செலுத்தும் வசதியில் கூகுள் பே, போன் பே ஆகியவற்றின் முற்றுரிமைக்கு வழிவகுத்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த இரு நிறுவனங்களும் பணம் செலுத்து வணிகத்தில் 85 விழுக்காட்டைக் கொண்டிருப்பதாகவும் சுட்டிக் காட்டினார். இதை வங்கிகள் தொடர்ந்து கண்டுகொள்ளாமல் வந்தால், முடிவில் தங்கள் மரபுவழியான வணிகத்தில் பெரும்பகுதியை இந்நிறுவனங்களிடம் இழக்க வேண்டி வரும் என எச்சரித்துள்ளார்.
இந்தப் போட்டியில் வெல்ல வேண்டுமென்றால் விற்பனை அடிப்படையிலான அணுகுமுறைக்குப் பதில் வாடிக்கையாளரை மையப்படுத்திய அணுகுமுறையை வங்கிகள் கைக்கொள்ள வேண்டும் என்றும் உதய் கோட்டக் தெரிவித்தார்.
Comments