பிசிசிஐ-ன் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டி... ஜெய் ஷா தலைமையிலான அணி வெற்றி

0 5751

பிசிசிஐ-ன் வருடாந்திர பொதுக்குழுகூட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தலைமையிலான அணி வெற்றி பெற்றது.

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா லெவன் மற்றும் பிசிசிஐ தலைவர் கங்குலி லெவன் அணிகளுக்கு இடையிலான 15 ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஜெய் ஷா  தலைமையிலான அணி, 15 ஓவர்கள் முடிவில் 128 ரன்கள் எடுத்தது. 

129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கங்குலி தலைமையிலான அணி, 15 ஓவர்களில் 127 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அதிகபட்சமாக கங்குலி 2 சிக்சர்கள் உட்பட 35 ரன்கள் எடுத்தார். இதேபோல் ஜெய் ஷா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments