எஸ்.சி.எஸ்.டி மாணவர் கல்வித் தொகையில் முறைகேடு என்று புகார்... உயர்கல்வித் துறை அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு
எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கான ஒதுக்கப் பட்ட கல்வி தொகையில் மெகா முறைகேடு நடந்துள்ளதாக அசோக்குமார் என்பவர் அளித்த புகாரையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை பெயர் குறிப்பிடாத உயர்கல்வித்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
2011 முதல் 2014 காலகட்டத்தில் எஸ்சி எஸ்டி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட கல்வித் தொகையில் சுமார் 17 கோடியே 36 லட்சத்து 30 ஆயிரத்து 369 ரூபாய் பணத்தில் முறைகேடு என புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 52 க்கும் மேற்பட்ட கலை அறிவியல் பொறியியல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் முறைகேடு நடந்திருப்பது குறித்து புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரில் தொடர்புடைய 52 கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் கல்லூரி கல்வி துறை ஏழு இணை இயக்குனர்கள், ஆதி திராவிட பழங்குடியின துறையில் பணியாற்றிய 11 அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
Comments