பர்மா சிறையில் வாடிய 10 இந்திய மீனவர்கள் 8 மாதங்களுக்கு பின்னர் விடுதலை
மத்திய-மாநில அரசுகளின் முயற்சியால் பர்மா சிறையில் 8 மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த 10 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்களில் 4 மீனவர்கள் தமிழக அரசின் உதவியால் நேற்றிரவு சென்னை வந்தனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கையைச் சேர்ந்த 4 மீனவர்களும் ,அந்தமான் நிக்கோபார் தீவைச் சார்ந்த 4 மீனவர்களும்,மேற்கு வங்கத்தைச் சார்ந்த 2 மீனவர்கள் உட்பட 10 மீனவர்கள் அந்தமான் நிக்கோபார் தீவில் சேகர் என்பவருக்கு சொந்தமான சுபஸ்ரீ என்ற விசைப்படகில் கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி மீன்பிடிக்க சென்றனர்.
தொடர்ந்து 12ந்தேதி அன்று அவர்களின் விசைப்படகு பர்மா கடல் எல்லையை தாண்டியதாக கூறி பர்மா கடலோர காவல் படையால் துப்பாக்கி சூடு செய்த பின்னர் கைது செய்யப்பட்டு சுமார் 8 மாதங்கள் பர்மா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் மத்திய மாநில அரசுகளின் முயற்சியில் அந்த 10 மீனவர்களும் எட்டு மாதங்களுக்குப் பின்பு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு பர்மாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு டெல்லி வந்தடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த தமிழக அரசு உடனடியாக 4 தமிழக மீனவர்களுக்கும் தேவையான உதவிகள் செய்து நேற்றிரவு சென்னைக்கு அழைத்து வந்தது.
Comments