திருமங்கலத்தில் ரூ.20ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது

0 3286

மதுரை மாவட்டம் திருமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் 20ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

முத்தையாபுரம் புதூர் பகுதியை சேர்ந்த காட்டு ராஜா என்பவர் கடந்த 2010-ஆம் ஆண்டு இலவச மின்சாரம் கோரி விண்ணப்பித்திருந்தார். அதற்கன அரசு உத்தரவு வந்ததை அடுத்து காட்டு ராஜா மினவாரிய அலுவலரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அரசுக்கு 24ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் தமக்கு 25ஆயிரம் ரூபாய் ஆக மொத்தம் 50ஆயிரம் ரூபாயினை மின் வாரிய அலுவலர் கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ந்து போன காட்டு ராஜா லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்களின் ஆலோசனையின் படி ரசாயனம் தடவிய 20ஆயிரம் ரூபாயினை உதவி மின் பொறியாளர் முகமது உவைசிடம் கொடுத்த போது அங்கு மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் உள்ளே நுழைந்து அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments