சீனா - லாவோஸ் இடையிலான புல்லட் ரயில் சேவை தொடக்கம்
சீனாவில் இருந்து லாவோஸ் நாட்டிற்கு புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட்டது. யுனான் மாகாணத்தின் கும்மிங் நகரில் இருந்து லாவோஸ் தலைநகர் வியான்டியான் வரை சேவை தொடங்கப்பட்டது.
160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலால் சீனா, லாவோஸ் பயணம் ஒரு நாளில் இருந்து 6 மணி நேரமாக குறைந்துள்ளது. நாளொன்றுக்கு 4 ரயில்களில் விட முடிவு செய்துள்ளதாகவும், கொரோனா பிரச்சினைகள் தீர்ந்தவுடன் ரயில்களின் எண்ணிக்கையை கூட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இருநாடுகளுக்கும் இடையிலான வணீக போக்குவரத்து ரயில்கள் இயக்கப்பட்டன.
Comments