தடுப்பூசிகள் தான் ஒமிக்ரானுக்கு எதிரான ஆயுதம் -உலக சுகாதார அமைப்பு

0 9239

ஒமிக்ரான் வைரசின் பாதிப்பில் இருந்து தப்புவதற்கு தடுப்பூசிகள் தான் முக்கிய யுத்தம் ஆகும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் மருத்துவ சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்த வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. வெளிநாட்டவர்களுக்குத் தடை விதிப்பது மட்டும் எந்த வித பலனும் தராது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருவோரை தடை செய்த ஆஸ்திரேலியாவில் புதிய வகை உருமாறிய கொரோனாவின் பாதிப்புகள் அதிகளவில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

ஒமிக்ரான் வைரஸ் ஆசிய நாடுகளிலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாகப் பரவி வருகிறது. எல்லைகளை மூடுவது கால அவகாசத்தைப் பெற உதவலாமே தவிர வைரஸ் பரவுவதைத் தடுக்க இயலாது. என்று உலக சுகாதார அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.ஒமிக்ரான் எந்தளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று தெரியாது. எனவே மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்றும் உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானியான சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments