இரவு 11 மணி கலாட்டா... வாத்தி செஞ்ச வேலை... காப்பு மாட்டிய போலீஸ்…! வாட்ஸ் அப்பால் சிக்கிய வரலாறு

0 6356
இரவு 11 மணி கலாட்டா... வாத்தி செஞ்ச வேலை... காப்பு மாட்டிய போலீஸ்…! வாட்ஸ் அப்பால் சிக்கிய வரலாறு

பரமக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகளுக்கு இரவு நேரத்தில் வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை செய்த குடிகார வரலாற்று ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

பள்ளிக்கூடம் இருக்கோ இல்லையோ... பசங்களுக்கு பாடம் நடத்துறமோ இல்லையோ... மாதம் 80 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கிக் கொண்டு குடிபோதையில் ஆசிரியைகளிடம் எல்லை மீறியதால் போலீசில் சிக்கி வரலாறு ஆன அரசுப் பள்ளி வரலாற்று ஆசிரியர் சந்திரன் இவர்தான்..!

மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடிஅரசு மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பில் இருந்து 10 ஆம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு வரலாறு பாடம் நடத்திவந்தவர் ஆசிரியர் சந்திரன். போகலூர் ஒன்றியம் நாகாச்சி கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் சந்திரன் பள்ளிக்கூடங்களில் ஆசிரியைகளை குறுகுறுவென பார்க்கும் பழக்கம் கொண்டவர் என்று கூறப்படுகின்றது. வீட்டிற்கு சென்ற பின்னர் மூக்கு முட்ட குடித்து விட்டு இரவு 11 மணிக்கு மேலாக ஆசிரியைகளுக்கு போன் செய்து ஆபாசமாக வர்ணிப்பது, படுக்கைக்கு அழைப்பது போன்ற வில்லங்கச் சேட்டைகளை செய்து வந்ததாக கூறப்படுகின்றது.

தன்னை திட்டி தீர்க்கும் ஆசிரியைகளின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஆபாச குறுந்தகவல்களை அனுப்பி வம்பு செய்வதையும் சந்திரன் வழக்கமாக செய்துள்ளார். பலமுறை பள்ளியில் வைத்து எச்சரித்த பின்னரும் அடங்காத சந்திரன் தொடந்து ஆசிரியைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சந்திரன் , இரவு நேர வாட்ஸ் அப் டார்ச்சரால் கடுமையான மன உளைச்சலுக்குள்ளான ஆசிரியை ஒருவர், தனது கணவரிடம் கூறிக் கதறியுள்ளார். அவரது கணவர் சத்திரக்குடி காவல் நிலையத்தில் ஆபாச ஆசிரியர் சந்திரனின் வாட்ஸ் அப் குறுந்தகவலை ஆதாரமாக கொண்டு புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து ஆசிரியர் சந்திரனை பிடித்து போலீசார் விசாரித்த போது, தான் செய்தது தவறு என்பதை உணராமல், இதில் என்ன தவறு இருக்கின்றது, என்பது போல அவர் நடந்து கொண்டதாக கூறப்படுகின்றது. இதையடுத்து கைது செய்யப்பட்ட சந்திரனை போலீசார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச்சென்ற போது , எந்த ஒரு குற்றஉணர்ச்சியோ கூச்சமோ இல்லாமல், மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு செல்லும் புது மாப்பிள்ளை போல ஹாயாக சென்று வேனில் ஏறி அமர்ந்து கொண்டார் சந்திரன்.

இதையடுத்து சந்திரனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். ஆசிரியர் சந்திரனுக்கு 2 மனைவிகள், அதில் ஒருவர் 10 வருடங்களுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். முப்பொழுதும் போதையில் மிதக்கும் குடிகார சந்திரன் , பெண்கள் விவகாரத்தில் வரை முறையில்லாமல் நடந்து கொள்ளும் குணமுடையவர் என்று கூறப்பட்டுகின்றது. சந்திரனின் 2 வது மனைவியும் அரசு ஊழியர் என்பதால், தான் வாங்கும் சம்பளத்தின் பெரும்பகுதியை சந்திரன் மது அருந்தவும், உல்லாச வாழ்க்கைக்கும் செலவிட்டு வந்ததாக கூறப்படுகின்றது.

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உரிய கல்வி தகுதியுடன் அரசுப் பணிக்காக காத்திருக்கும் சூழலில், சந்திரன் போன்ற விபரீத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். நடவடிக்கைகள் கடுமையாக இருந்தால் தான், பள்ளிக்கூடங்களில் இதுபோன்ற அத்துமீறல்கள் இனி தொடராது என்பதே அனைவரின் ஆதங்கமாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments