ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பெங்களூரு வந்த 10 வெளிநாட்டவர்களை காணவில்லை - கர்நாடக சுகாதாரத்துறை
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பெங்களூரு வந்த 10 வெளிநாட்டவர்களை காணவில்லை என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட பிறகு, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து 57 பேர் பெங்களூரு வந்ததாகவும், அவர்களில் 10 பேரின் இருப்பிடத்தை கண்டறிய முடியவில்லை எனறும் கூறினார். மேலும், மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெறுவதாகவும், அவர்களது செல்போன்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்தவர் உள்பட 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்யும் பணி கர்நாடகாவில் தீவிரமடைந்துள்ளது.
Comments