அவதூறாகப் பேசியதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென வலியுறுத்தி, நடிகை கங்கணா ரணாவத்தின் காரை வழிமறித்த விவசாயிகள்

0 4634

பஞ்சாபில் நடிகை கங்கணா ரணாவத்தின் காரை வழிமறித்த விவசாயிகள், காவல்துறையினர் தலையிட்டதால் அங்கிருந்து செல்ல அனுமதித்தனர்.

மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளைப் பயங்கரவாதிகள், காலிஸ்தான் ஆதரவாளர்கள் எனக் கங்கணா ரணாவத் விமர்சித்திருந்தார். இந்நிலையில் பஞ்சாபில் கிராத்பூர் என்னுமிடத்தில் காரில் வந்த கங்கணா ரணாவத்தை வழிமறித்த விவசாயிகள், அவதூறாகப் பேசியதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இது குறித்து ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள கங்கணா, ஒரு கும்பல் தன்னைச் சுற்றிக் கொண்டு, கொலை மிரட்டல் விடுத்ததாகவும், காவல்துறையினர் அங்கு வராவிட்டால் தன்னை அவர்கள் தாக்கியிருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments