நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள்

0 6636

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்துள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சுப்மான் கில் மற்றும் மயங் அகர்வால் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சுப்மான் கில் 44 ரன்கள் எடுத்து அவுட்டாகிய நிலையில், மயங் அகர்வால் சதம் அடித்தார்.

கேப்டன் விராட் கோலி மற்றும் புஜாரா டக் அவுட் ஆகிய நிலையில், கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயஸ் ஐயர் 18 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்துள்ளது. மயங் அகர்வால் 120 ரன்களும், விரித்திமான் சஹா 25 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments