3-ம் ஆண்டு மாணவிகள் ராக்கிங் செய்வதாக முதலாம் ஆண்டு மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்..
சேலத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தங்கும் விடுதியில், 3-ம் ஆண்டு மாணவிகள் ராக்கிங் செய்வதாக முதலாம் ஆண்டு மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
நாள்தோறும் இரவு நேரத்தில் பாட்டு பாட சொல்லியும், நடனம் ஆடச் சொல்லியும் துன்புறுத்துவதாகவும், காலை நேரத்தில் சமையல் வேலை செய்ய வற்புறுத்துவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments