அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு..

0 3325
அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

விதிகளை பின்பற்றாமல் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை ரத்து செய்யக் கோரியும் அக்கட்சியின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு, நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, எதிர் தரப்பு விளக்கம் அளித்த பிறகு வழக்கில் முகாந்திரம் இருந்தால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் தயங்காது என எனக் குறிப்பிட்ட நீதிபதி, இடைக்கால தடை உத்தரவு விதிக்க மறுத்துவிட்டார்.

அதேசமயம் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து நிர்வாகிகள் தேர்வு வரை சட்ட விதிமீறல் இருப்பது தெரியவந்தால், தேர்தல் முடிவுகளை ரத்துசெய்யப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY